தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீசில்லா பகுதியில் மயில் இறைச்சி சமைத்ததாக வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பிரணைகுமார் என்பவர் ஸ்ரீ டிவி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். இவர் தனது யூடியுப் சேனலில் மயில் இறைச்சி சமைப்பது எப்படி என்ற வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் யுடியூபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் லைக்குகள் பெறுவதற்காக கோழிக்கறியை மயில் இறைச்சி எனக்கூறி வீடியோ வெளியிட்டதாக தெரிவித்தார்.