சென்னை புறநகர் ரயில் சேவை வரும் 18-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த மாதம் முதல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பணிகள் வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 நாள்கள் அதாவது வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.