டெல்லி ஷம்பு எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை பகுதியளவு அகற்றுமாறு ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தையொட்டி, டெல்லி ஷம்பு எல்லையில் ஹரியானா, பஞ்சாப் மாநில அரசு சார்பில் வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றுமாறு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து ஹரியானா அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் செல்லும் வகையில், ஷம்பு எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை பகுதியளவு அகற்றுமாறு உத்தரவிட்டது.