வக்பு சட்டத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் அது மதவாதமா என மகாராஷ்டிரா ஆளுநர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறித்து மகாராஷ்டிரா ஆளுநர் ராதாகிருஷ்ணன் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், வக்பு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, நல்ல மாற்றத்தை கொண்டு வரக் கூடாது என நிறைய பேர் நினைத்து அதற்காக சட்ட மசோதாவை எதிர்க்கின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும், போலியாக மதச்சார்பின்மை என்று சொல்லி, இனி யாரும் காலம் ஓட்ட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.