நாமக்கல்லில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் சாலையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகியுள்ளது.
சாலையில் மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்திற்கும் மேலாக பயணிக்கும் இளைஞர்கள், அவற்றை வீடியோவாக பதிவுசெய்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.