நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர் பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர்களின் கூட்டத்தில் 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது 3 தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்கள், மீதமுள்ளவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது செயல் அலுவலர் சோமசுந்தரம் என்பவர், கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தார்மீக உரிமையில்லை என கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.