செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 500 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 வாரமாக காலை வேளையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு நேரத்தில் கனமழை பெய்து வந்தது.
கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில், மொறப்பாக்கம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையின் காரணமாக நீரில் மூழ்கி முழுவதும் சேதமடைந்தன.
இதனால் வேதனையடைந்த விவசாயிகள் அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.