மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வங்கதேசத்தின் இடைக்கால அரசை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
வங்கதேசத்தில் வெடித்த கலவரம் காரணமாக பிரதமர் பதவியை ஷேக் ஹசினா ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர் ஆகியோரை கருத்தில் கொண்டு இடைக்கால அரசு ஆட்சிசெய்ய வேண்டுமென அன்டோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டார்.
மேலும், இடைக்கால அரசின் ஆதரவுடன், அமைதியான முறையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.