கேரள மாநிலம் வயநாட்டில் வசிக்கும் மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்து கேரள வங்கி அறிவித்துள்ளது.
வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வயநாட்டில் வசிக்கும் மக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூட்டுறவு வங்கிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கேரள வங்கி அறிவித்துள்ளது.