சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி செங்கோட்டையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 700 AI-சார்ந்த முக அடையாளம் காணும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே விழாவுக்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.