சென்னையில் ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
மூன்று முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரோகித்ராஜ், தேனியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், ரோகித்ராஜை கைதுசெய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, டி.பி.சத்திரம் அருகே போலீசாரை தாக்கிவிட்டு ரோகித்ராஜ் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்துபோலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரோகித்ராஜ் காலில் குண்டு பாய்ந்ததாகவும், உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.