உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நவாப் சிங்கை சமாஜ்வாடி கட்சி பாதுகாக்க நினைப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னோஜில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் நவாப் சிங் யாதவ் கைது செய்யப்பட்டார். போக்சோ தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதான நவாப் சிங், இது முற்றிலும் சூழ்ச்சியால் நடத்தப்படும் நாடகம் என்றும், இதற்கு எதிராக தாங்கள் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் நவாப் சிங்கை காப்பாற்றவே சமாஜ்வாடி கட்சி நினைப்பதாக பாஜக பிரமுகர் ராகேஷ் திரிபாதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், உண்மையை மூடி மறைக்க கட்சி முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நவாப் சிங் மீது 16 வழக்குகள் கன்னோஜ் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.