நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும் காதல் வயப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில், மனு பாக்கர் அதை மறுத்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் 2 வெண்கலம் வென்றார். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதனிடையே, மனு பாக்கரின் தாயாரும் நீரஜ் சோப்ராவும் பேசிக் கொண்டிருந்தது இணையத்தில் வைரலானது.
இதன்மூலம் பல்வேறு யூகங்கள் கிளம்பிய நிலையில், நீரஜ் சோப்ரா தங்களுக்கு மகனைப் போன்றவர் எனக் கூறி, மனு பாக்கரின் தந்தை கிஷான் பாக்கர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.