ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக பல்வேறு நாடுகளும் தொடர்ந்து பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் ஐரோப்பாவில் மட்டும் வெப்பம் காரணமாக 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் தெரிவித்துள்ளது.