மயிலாப்பூர் சாசுவத நிதி லிமிடெட் தலைவரான தேவநாதனை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சாசுவத நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளனர். 10 ஆயிரம் பேருக்குமேல் உறுப்பினராக உள்ளனர். நிரந்த வைப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டியை முறையாக திருப்பி அளிக்காமல் தேவநாதன் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
மேலும், டெபாசிட்தாரர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்ததாக நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பொது மக்கள் பணம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்று மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தேவநாதனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.