கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ரவுடியின் வங்கிக் கணக்கில் 2.5 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பேர்பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ரவுடி அசோக்குமார் மீது 10 -க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இவரது வங்கிக்கணக்கில் 2.5 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகள் அசோக்குமாரிடம் கேட்ட போது, பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அசோக்குமார் 2 கோடி ரூபாய் பணத்தை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு தலைமறைவாகினார்.
இதையறிந்த காவல்துறையினர் மற்றும் சைபர் கிரைம் பிரிவினர் ரவுடி அசோக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.