பாரீஸ் ஒலிம்பிக் இறுதி போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு மீது ஆகஸ்ட் 16-ஆம் தேதி சர்வதேச நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதாக கூறியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோனது.
இதைத்தொடர்ந்து தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 16-ஆம் தேதி பிரான்ஸ் நேரப்படி மாலை 6 மணிக்குள் தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.