நெல்லை எம்.ஜி.ஆர் புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறையை பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியரிடம் பயனாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வேய்ந்தான் குளத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டண கழிப்பறையை பயன்படுத்த வந்த நபரிடம் ஊழியர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பயனாளி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா உத்தரவிட்டுள்ளார்.