“பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
பாஜக மாவட்ட துணைத் தலைவர் குமரேசன் தலைமையில் அளிக்கப்பட்ட புகாரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்தும், ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலும் செல்லூர் ராஜூ பேசியதாக கூறப்பட்டுள்ளது.