நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள எருமாடு, குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை, அன்புமணி என்ற நபரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி மருத்துவமனையில் அன்புமணி சிகிச்சை பெற்று வரும் நிலையில், எருமாடு பகுதியில் உலா வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.