சுதந்திர தினத்தையொட்டி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்ற உள்ளார்.
இதுதொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வானொலி மற்றும் தொலைக்காட்சியில் இரவு 7 மணி முதல் குடியரசு தலைவரின் உரை ஒளிபரப்பப்படும் என்றும், அதை தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.