ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேநீர் விருந்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.