வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை அரசு தண்டிக்கும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 5-ம் தேதி வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அங்குள்ள கோயில்கள், ஹிந்து அமைப்புகள் என 278 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹேக்ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட சில தலைவர்களும் கலவரத்தில் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், டாக்காவில் உள்ள தாகேஸ்வரி அம்மன் கோயிலுக்கு அந்நாட்டு அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் வருகை தந்தார்.
அப்போது பேசிய அவர், யாரையும் முஸ்லீம், ஹிந்து என பிரித்து பார்க்காமல் அனைவரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் விவகாரத்தில் ஹிந்து மக்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் வங்கதேசத்தின் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை அரசு நிச்சயம் தண்டிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.