தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில், தனியார் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படும் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையில் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி பாடப் புத்தகங்களின் விலை 40 முதல் 90 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் விலை 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையும், ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் விலை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு புத்தகத்தின் விலை 70 ரூபாய் வரையும், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களின் விலை 50 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளது.