கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கினர்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து கொல்கத்தா வந்த சிபிஐ அதிகாரிகள், ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் விசாரணையை தொடங்கினர்.
இந்த குழுவில், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.