வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 401 உடல்கள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் 52 உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் கூறியுள்ளார்.
நிவாரண முகாம்களில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் பலர் தங்களது குடும்பத்தினரை பற்றிய தகவல் தெரியாமல் காத்திருப்பதாகவும், அமைச்சர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.