வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வாடகை உதவித்தொகையாக வழங்கப்படுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், உடலில் 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாயும், 40 முதல் 50 சதவீதம் பாதிப்படைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.