சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீன வங்கிகளில் புதிய கடன் விகிதம், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. மேலும், ஏற்றுமதி குறைந்ததோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
கொரோனா பாதிப்பிற்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், திட்டமிட்டபடி 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அந்நாடு எட்டுவது கடினம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.