அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.
MQ-9B ‘ஹண்டர்-கில்லர்’ என்ற பெயர் கொண்ட 31 ட்ரோன்களை இந்தியா வாங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்காக பாகிஸ்தான் சீனாவை நாட்டியுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.