தேசப் பிரிவினையின்போது நிகழ்ந்த கொடுமைகள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஆகஸ்ட் 14-ம் தேதி தேசப்பிரிவினை கொடுமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த ஒருநாள் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இடப்பெயர்வு, வன்முறை உள்ளிட்ட தலைப்புகளில் இடம்பெற்ற புகைப்படங்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.