சேலம் மாவட்டம், தலைவாசல், ஆத்தூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த, ஜூன் மாதம் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சிவச்சந்திரன், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.