ஒசூர் அருகே சட்டவிரோத மதுபான விற்பனையை தட்டிக்கேட்ட விவசாயி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன பேளகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் தனது பேரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, முனிராஜின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர்கள் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த முனிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.