சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் இருந்து பெண்கள் வெளிநடப்பு செய்தனர்.
காரைக்குடியை மாநகராட்சியாக அறிவித்த தமிழக ஆரசு, அரியக்குடி இலுப்பகுடி உட்பட 5 ஊராட்சிகளை அதனுடன் இணைத்தும் உத்தரவிட்டது.
இதனால் 100 நாள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறி அரியக்குடி கிராம சபை கூட்டத்தில் இருந்து பெண்கள் வெளிநடப்பு செய்தனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்தக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர்.