இந்திய நுகர்வு வளர்ச்சி பல்வேறு உலக நாடுகளை விட அதிகமாக உள்ளதென ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்டின் சமீபத்திய அறிக்கையின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அத்தியாவசியப் பொருட்களின் நுகர்வே 60 சதவீதத்திற்கும் மேல் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நுகர்வு கணிசமாக அதிகரித்து வருவதாகவும், கடந்த 30 ஆண்டுகளில், இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் நுகர்வு 200 பில்லியன் டாலரில் இருந்து 2 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.