அமெரிக்க அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்த தனக்கு உரிமை இருப்பதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் மீது தனிப்பட்ட விமர்சனங்களை தெரிவிக்க வேண்டாமென, ட்ரம்ப்-பிடம் அவர் சார்ந்த குடியரசு கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், கமலா ஹாரிஸின் புத்திசாலித்தனத்தின் மீது தனக்கு அதிக மரியாதை இல்லை எனவும், தனக்கு எதிராக நீதித்துறையை அவர் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.