காசாவில் தனது இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி வந்தபோது, மனைவியும், குழந்தையும் போரில் இறந்ததைக் கண்டு கதறி அழுத நபரின் வீடியோ, காண்போரை கலங்க வைத்துள்ளது.
டெய்ர் அல் ஃபாலா பகுதியை சேர்ந்த முகமது அபு அல்- கும்சான் என்ற நபர், தனது இரட்டை குழந்தைகளான அசைல் மற்றும் அசெருக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்றுள்ளார்.
அவர் வீட்டிற்கு திரும்பும்போது, இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் வீடியோ, அனைவரையும் கலங்க வைத்துள்ளது.