ரஷ்யா மீதான உக்ரைனின் படையெடுப்பினால் மூன்றாம் உலகப்போர் நெருங்கிக் கொண்டிருப்பதாக, ரஷ்ய எம்பி Mikhail Sheremet தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்குள் புகுந்த உக்ரைன் படைகள், அங்குள்ள Sudzha நகரை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், குர்ஸ்க் பகுதியில் உள்ள சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனைக் குறிப்பிட்டே, ரஷ்ய எம்பி மூன்றாம் உலகப் போர் நெருங்கியுள்ளதாக எச்சரித்துள்ளார்.