கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் பெய்யும் கனமழையால், தமிழகத்துக்கு வரும் பெரிய வெங்காயத்தின் வரத்து சரிந்துள்ளது.
கடந்த மாதம் வரை தினசரி 150 லாரிகளில் விற்பனைக்கு வந்த பெரிய வெங்காயம் தற்போது 70 லாரிகளாக குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் தமிழக உழவர் சந்தைகளில் கிலோ 40 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் தற்போது 56 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.