உத்தரகாண்ட் மாநிலத்தில் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ருத்ராபூர் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர், கடந்த 30-ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, தர்மேந்திர குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.