நடிகர் விஜயின் தளபதி 69 படத்தை இயக்குவதை ஹெச்.வினோத் உறுதி செய்துள்ளார்.
முழுநேர அரசியலில் இறங்குவதால், தளபதி 69 படமே தனது கடைசி படமென விஜய் அறிவித்தார். இதனால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்தன.
இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹெச்.வினோத் இதனை உறுதி செய்துள்ளார்.
இப்படம் அரசியல் சார்ந்ததாக இல்லாமல் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வணிக ரீதியான படமாக இருக்குமென ஹெச்.வினோத் கூறியுள்ளார்.