அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தாமதப்படுத்தியதற்கு திமுக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் : அண்ணாமலை
Sep 10, 2025, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தாமதப்படுத்தியதற்கு திமுக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் : அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 17, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தாமதப்படுத்தியதற்கு திமுக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”ஒரு வழியாக, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் 17 அன்று, தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின்  தொடங்கி வைக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஆட்சிக்கு வந்து கடந்த 39 மாதங்களாக, பொதுமக்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் காலதாமதமாக்கிக் கொண்டிருந்த திமுக அரசு, ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பாக, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை அடுத்துப் பணிந்திருக்கிறது.

பொதுமக்களின் 70 ஆண்டு காலக் கனவு, தமிழக பாஜகவின் வலியுறுத்தலின் பேரில் நிறைவேறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மூலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான நீர்நிலைகள், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடைவதோடு, லட்சக்கணக்கான பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

கடந்த 39 மாதங்களாகத் தாமதப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கத் திமுக அரசு கடமைப்பட்டுள்ளது என்பதையும், இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். மேலும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடு நிதி இதுவரையிலும் வழங்கவில்லை. அவர்களுக்கான இழப்பீடு, திட்டத்தின் தொடக்க விழா அன்றே அறிவிக்கப்பட வேண்டும். ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாமல், பல ஆண்டுகள் காலதாமதமாகியிருக்கிறது.

திட்டம் நிறைவேறுவது, அவர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியளித்தாலும், அவர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படுவதே, அந்த மகிழ்ச்சியை முழுமையானதாக்கும். எனவே, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடும், உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அது மட்டுமின்றி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும், அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது.

தமிழகத்தில், பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் தலையாய பணி. ஆனால், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும், திமுக அரசு, இதுவரை, தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்கவில்லை. இனியும் தாமதிக்காமல், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க முதலமைச்சர்  ஸ்டாலின் முன்வர வேண்டும்.

இதன் மூலம், தமிழக அணைகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பில், தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். தற்போது, ஆகஸ்ட் 17 அன்று, திட்டத்தைத் தொடங்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

எங்கள் முக்கியக் கோரிக்கை நிறைவேறியிருப்பதால், தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது. எனினும், விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரையில், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: cm stalinDMK governmentTamil Nadu BJP State President AnnamalaiAthikadavu-Avinasi project
ShareTweetSendShare
Previous Post

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலக மக்கள் தொடர்பு அலுவலராக ஜெயசிங் பொறுப்பேற்பு!

Next Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு!

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies