விருதுநகரில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் மழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடையில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவார பகுதியில் முடிக்காணிக்கை செலுத்தி சுவாமியை வழிபட்டு சென்றனர்.