முடா ஊழல் வழக்கை எதிர்கொள்ளும் முதல்வர் சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும என கர்நாடகா பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தியுள்ளார்.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி சூர்யா, விசாரணை முகமைகள் வழக்குத் தொடரும் செயல்முறையைத் தொடங்க வேண்டும் என கேட்டுகொண்டார். முதல்வர் பதவியில் சித்தராமையா ராஜினாமா செய்து, பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
, ஆளுநரின் அனுமதியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கவர்னர் தனது அரசியல் சாசன அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.