நேஷனல் ஹெரால்டு முதல் முடா ஊழல் கர்நாடகா வரை, காங்கிரஸ் கட்சியின் ஊழல் வரலாறு தொடர்வதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்னார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “காங்கிரஸ் கட்சியின் ஊழலின் பாரம்பரியம் தொடர்கிறது! நேஷனல் ஹெரால்டு முதல் முடா ஊழல் கர்நாடகா வரை, காங்கிரஸ் கட்சியின் ஊழல் வரலாறு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட லாபத்திற்காக அவர்கள் மீண்டும் மீண்டும் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து வருகின்றனர். தலித் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாவலராக காங்கிரஸ் தன்னை காட்டிக் கொள்ளும் அதே வேளையில், தலித் குடும்பத்திடம் இருந்து நிலத்தை அபகரிப்பதில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என நட்டா தெரிவித்துள்ளார்.