ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதறியது.
ரஷியாவின் கிழக்கு கம்சட்கா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை ரஷ்யாவின் கிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், 50 கிலோ மீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அடுத்தடுத்து லேசான நில அதிர்வுகளும் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதறியதாகவும், அதில் வெளியான சாம்பல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.