மயிலாடுதுறையில் மாயூர நாதர் கோவிலில், 34 -ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியில் திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று முதல் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.