ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஆடி முழுவதும் நடை சாத்தப்பட்ட உமையநாயகி அம்மன் கோவில் ஆடி முதல் நாளில் திறக்கப்பட்டது.
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும் நிலையில் உமயநாயகி அம்மன் கோயில் சாத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தரைக்குடி கிராமத்தில் அமைந்துள்ள உமயநாயகி அம்மன் கோவில் ஆடி முழுவதும் நடை சாத்தப்பட்டு ஆவணி மாதம் தொடங்கியதையடுத்து திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.