தனி நபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நிதி மோசடியில் ஈடுபட்டதாக செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், யார் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்பதை தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டுமெனவும், குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் கண்டனம் தெரிவித்தனர்.