கடலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பூச்சி என்கிற மூர்த்தியை மர்ம நபர்கள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்மியாம் பேட்டை பகுதியை சேர்ந்த பூச்சி என்கிற மூர்த்தி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கம்மியாம்பேட்டை அய்யனார் கோயில் அருகே நின்று கொண்டிருந்த மூர்த்தியை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.