தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதால் மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி வார்டு உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதையடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் முறைகேடு புகார் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஊராட்சிமன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.